Friday, January 5, 2024

சுவாலைப் பரிசோதனை (Flame Test)

பெரும்பாலான s தொகுப்பு மூலகங்களும் d தொகுப்பு மூலகங்களில் Cu2+ அயனும் வேறு சில அயன்களும் சுவாலைப் பரிசோதனைக்கு விடையளிக்கும்.

இதற்கு பிளாட்டினக்கோல் அல்லது காரியக்கோல் பயன்படுத்தப்படும்.

ஆவிப்பறப்புக் கூடிய HCl அல்லது HBr அல்லது HI என்பன பயன்படுத்தப்படலாம்.

காரியக் கோலானது HCl இல் அமிழ்த்தி எடுக்கப்பட்டு பின் பரிசோதிக்கப்படவேண்டிய கரைசலில் துவைத்து சுவாலையில் பிடிக்கப்படும். இதற்கு அமைய சுவாலையில் பெறப்படும் நிறத்திற்கு அமைய கற்றயன்கள் இனங்காணப்படும்.

சுவாலைச் சோதனைக்கு s தொகுப்பைச் சேர்ந்த மூலக அயன்களில் Be2+இ Mg2+ ஆகியவை விடையளிக்க மாட்டாது.